search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மத நம்பிக்கை"

    கோவில்களில் மழைக்காக யாகம் நடத்துவதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கை தள்ளுபடி செய்த ஐகோர்ட்டு, மத நம்பிக்கை தொடர்பான விஷயத்தில் தலையிட முடியாது என்று உத்தரவிட்டுள்ளது.
    சென்னை:

    தமிழகத்தில் பருவமழை பொய்த்துவிட்டதால், தண்ணீர் பஞ்சம் தலைவிரித்து ஆடுகிறது. சென்னை மற்றும் பல மாவட்டங்களில் குடிநீருக்காக பொதுமக்கள் கடுமையாக அவதிப்பட்டு வருகின்றனர். இதையடுத்து தமிழக அறநிலையத்துறை, தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து கோவில்களிலும், மழை வேண்டி யாகம் நடத்த கடந்த மாதம் 26-ந் தேதி உத்தரவிட்டு, சுற்றறிக்கை வெளியிட்டது.

    இந்த சுற்றறிக்கையை ரத்து செய்ய கோரியும், கோவில்களில் மழைக்காக நடந்து வரும் யாகங்களுக்கு தடை விதிக்க வேண்டும் என்றும் சென்னை ஐகோர்ட்டில் பத்திரிகையாளர் அன்பழகன் என்பவர் பொதுநல வழக்கு தொடர்ந்தார்.

    இந்த வழக்கு நீதிபதிகள் சி.வி.கார்த்திகேயன், கிருஷ்ணன் ராமசாமி ஆகியோர் முன்பு விசாரணைக்கு வந்தது.

    அப்போது மனுதாரர் தரப்பில் ஆஜரான வக்கீல், ‘இதுபோன்ற யாகம் நடத்த அரசே பணம் ஒதுக்குவது சட்டவிரோதமானது. அதுவும், யாகம் நடத்த வேண்டும் என்று இப்படி ஒரு உத்தரவை பிறப்பிக்க இந்துசமய அறநிலையத்துறைக்கு அதிகாரமும் கிடையாது’ என்று வாதிட்டார்.

    இந்து சமய அறநிலையத்துறை தரப்பில் ஆஜரான வக்கீல், ‘பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே திருஞானசம்பந்தரின் பஞ்சாங்க நூலில் மழை வேண்டி யாகம் நடத்தலாம் என்று குறிப்புகள் உள்ளன’ என்று வாதிட்டார்.

    இதனை ஏற்று கொண்ட நீதிபதிகள், ‘தமிழக ஜோதிடர்களை போல் அடுத்த 5 மாதங்களில் ஏற்படும் கிரகணம் போன்ற வானவியல் நிகழ்வுகளை மேற்கத்திய ஜோதிடர்களால் கணிக்க முடியுமா?’ என கேள்வி எழுப்பினர். பின்னர், ‘யாகம் மக்களின் நன்மைக்காகவே நடத்தப்படுகிறது. இதுபோன்ற மத நம்பிக்கை தொடர்பான விஷயத்தில் தலையிட முடியாது’ என்று கூறி மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.

    சபரிமலை விவகாரத்தில் மத நம்பிக்கையை காப்பாற்ற சாகும் வரை போராட தயாராக உள்ளேன் என்று சுரேஷ்கோபி எம்.பி. கூறினார். #SureshGopi #Sabarimala
    நாகர்கோவில்:

    திருவிதாங்கூர் மன்னர் ஆட்சி காலத்தில் குமரி மாவட்டம் பத்மநாபபுரம் அரண்மனையில் ஆண்டுதோறும் நவராத்திரி விழா சிறப்பாக கொண்டாடப்பட்டு வந்தது.

    1840-ம் ஆண்டில் சுவாதி திருநாள் மகாராஜா காலத்தில் நவராத்திரி விழா திருவனந்தபுரத்துக்கு மாற்றப்பட்டது. திருவனந்தபுரத்தில் நடைபெறும் இந்த நிகழ்ச்சியில் குமரி மாவட்டத்தில் இருந்து சுசீந்திரம் முன்னுதித்த நங்கை அம்மன், குமார கோவில் வேளிமலை முருகன் மற்றும் பத்மநாபபுரம் தேவாரக்கட்டு சரஸ்வதி அம்மன் ஆகிய சாமி சிலைகள் பங்கேற்பது வழக்கமாக இருந்து வருகிறது.

    இந்த ஆண்டுக்கான நவராத்திரி விழா வருகிற 10-ந் தேதி தொடங்குகிறது. இதில் பங்கேற்பதற்காக சுசீந்திரம் முன்னுதித்த நங்கை அம்மன் சிலை இன்று ஊர்வலமாக புறப்பட்டது.

    சுசீந்திரம் முன்னுதித்த நங்கை அம்மன் சிலை தமிழக, கேரள போலீசாரின் அணிவகுப்பு மரியாதையுடன் திருவனந்தபுரத்திற்கு புறப்பட்டுச் சென்ற காட்சி.


    அப்போது கேரள, தமிழக போலீசார் துப்பாக்கி ஏந்தி அணிவகுப்பு மரியாதை செலுத்தினர். இந்த நிகழ்ச்சியில் பிரபல நடிகரும், எம்.பி.யுமான சுரேஷ்கோபி கலந்து கொண்டு தரிசனம் செய்தார்.

    சபரிமலை தீர்ப்பு என்பது தனி வி‌ஷயம். அது குறித்து நான் அரசியல் ரீதியாக எதுவும் கூற விரும்பவில்லை. ஆனால் செய்ய வேண்டியது நிறைய உள்ளது.

    சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பு என்பது வேறு, மத நம்பிக்கை என்பது வேறு. நாங்கள் கடவுள் நம்பிக்கை உடையவர்கள். பாரம்பரிய கலாசாரம், மத நம்பிக்கையை காப்பாற்ற சாகும் வரை போராடவும் தயாராகவும் உள்ளேன். போராட்டத்துக்கு முன் நிற்கவும் தயாராக உள்ளேன்.

    இவ்வாறு அவ்வாறு கூறினார்.  #SureshGopi #Sabarimala

    ×